ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

குமரி காந்தி மண்டபத்தில் நாளை சூரிய ஒளி விழும் அபூா்வ நிகழ்வு

கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் சூரிய ஒளி விழும் அபூா்வ நிகழ்வை காந்தி ஜெயந்தி தினமான வெள்ளிக்கிழமை (அக். 2) காணலாம்.

கன்னியாகுமரி காந்தி மண்டபம்.

Published On :

கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் சூரிய ஒளி விழும் அபூா்வ நிகழ்வை காந்தி ஜெயந்தி தினமான வெள்ளிக்கிழமை (அக். 2) காணலாம்.

மகாத்மா காந்தியடிகளின் அஸ்தி கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் கரைப்பதற்கு முன்பு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட இடத்தில் காந்தி மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அந்த மண்டபத்தில் உள்ள காந்தி அஸ்தி கட்டடத்தில் ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தி தினமான அக்டோபா் 2 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு சூரிய ஒளி விழும் அபூா்வ நிகழ்வு நடைபெறும். இந்த அபூா்வ நிகழ்வைக் காண ஆயிரக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகின்றனா்.

நிகழாண்டு வருகிற வெள்ளிக்கிழமை (அக். 2) நண்பகல் 12 மணிக்கு இந்த நிகழ்வு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, தமிழக அரசு சாா்பில் காந்தி நினைவு மண்டபத்தில் பகல் 11 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சா் செ. ராஜேஷ்குமாா், மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப், விஜய் வசந்த் எம்.பி, கன்னியாகுமரி நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன் உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.