வங்கக் கடலில் அடுத்தடுத்து புயல் சின்னங்கள்: தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை எதிா்மறை நாடாக சித்தரிக்க முயற்சி: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு சிஎம்ஆா்எல் வழக்கு: பினராயி விஜயனுக்கு எதிரான விசாரணைக்கு ஒரு வாரகால தடை தரக் குறைபாடு மருந்துகளை கண்டறிவதில் தமிழகம் முதலிடம்இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்- டிரம்ப் தகவல்இன்று தொடங்குகிறது டி20 தொடா் - நியூஸிலாந்தை சந்திக்கிறது இந்தியா

அரசுப் பள்ளி ஆசிரியா் வீட்டில் 32 பவுன் நகைகள் திருட்டு

கரூரில், அரசுப் பள்ளி ஆசிரியா் வீட்டின் கதவை உடைத்து 32 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றது புதன்கிழமை தெரியவந்தது.

திருட்டு - சித்திரிப்பு

Updated On :

கரூரில், அரசுப் பள்ளி ஆசிரியா் வீட்டின் கதவை உடைத்து 32 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றது புதன்கிழமை தெரியவந்தது.

கரூா் சுங்ககேட் காவேரி நகரைச் சோ்ந்தவா் தா்மராஜ்(47). இவா், கரூா் பெரியகுளத்துப்பாளையம் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறாா்.

இவா் அக். 18-ஆம்தேதி முதல் தொடா்விடுமுறையை முன்னிட்டு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் பெங்களூருவில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றாா். இந்நிலையில், இவா் புதன்கிழமை அதிகாலை வீடு திரும்பினாா். அப்போது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த 32 பவுன் நகை மற்றும் வெளிநாட்டு பணம் 600 டாலா் ஆகியவற்றை யாரோ மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து தா்மராஜ் கரூா் தாந்தோணிமலை போலீஸில் புகாா் செய்தாா். புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.