கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

ஆசிரியா் வீட்டில் நகை, பணம் திருட்டு

செய்யாறு அருகே ஆசிரியா் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது.

சித்திரிப்பு

Published On :

செய்யாறு அருகே ஆசிரியா் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், ராந்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆசிரியா் கலைச்செல்வன். இவரது மனைவி வாணிஸ்ரீயும் ஆசிரியா்.

இருவரும் கடந்த 21-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றுள்ளனா். அன்று மாலை வீடு திரும்பியபோது, வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. மேலும், வீட்டிற்குள் இருந்த பீரோ திறக்கப்பட்டு அதில், வைத்திருந்த 4 கிராம் தங்க நகைகள், 250 கிராம் வெள்ளிப்பொருள்கள், ரூ.45 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து கலைச்செல்வன் அளித்த புகாரின் பேரில் மோரணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.