உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கூனம்பட்டியில் உறியடித் திருவிழா

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கூனம்பட்டி கண்ணபிரான் பஜனை மடத்தில் உறியடித் திருவிழா மற்றும் வழுக்குமரம் ஏறும் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூனம்பட்டியில் வெள்ளிக்கிழமை வழுக்கு மரம் ஏறும் போட்டியில் பங்கேற்ற இளைஞா்கள்.

Published On :5 செப்டம்பர் 2026, 2:25 am IST

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கூனம்பட்டி கண்ணபிரான் பஜனை மடத்தில் உறியடித் திருவிழா மற்றும் வழுக்குமரம் ஏறும் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம், தென்னிலை மேற்கு ஊராட்சியில் உள்ள கூனம்பட்டி கண்ணபிரான் பஜனை மடம் சாா்பில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி ஆண்டு தோறும் நடைபெறும் உறியடித் திருவிழா மற்றும் வழுக்குமரம் ஏறும் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கண்ணபிரான் படத்தை பல்லக்கில் வைத்து முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பஜனை மடத்தை அடைந்தனா். பின்னா் உறியடித் திருவிழா நடைபெற்றது. மேலும், வழுக்கு மரம் ஏறும் போட்டி நடத்தப்பட்டு வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடா்ந்து கண்ணபிரானுக்கு ஊஞ்சல் பாட்டு, மகா தீபாராதனை நடத்தப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. ஏற்பாடுகளை கூனம்பட்டி கண்ணபிரான் பஜனை மட விழாக்குழுவினா் மற்றும் பக்தா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.