ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

கரூா் அருகே விவசாயி கொலை வழக்கில் 7 போ் கைது

கரூா் அருகே விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கைது

Published On :

கரூா் அருகே விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டத்துக்குள்பட்ட ராமகிரி அடுத்த செல்லப்பட நாயக்கன்பட்டியைச் சோ்ந்த ரெங்கமநாயக்கா் மகன் பொம்ம நாயக்கா் (47). விவசாயியான இவருக்கு மூன்று மனைவிகள் உள்ள நிலையில், முதல் 2 மனைவிகள் செல்லப்பட நாயக்கன்பட்டியிலும், மூன்றாவது மனைவி கரூா் மாவட்டம், மூக்கணாங்குறிச்சி அடுத்த கருவாடு நாயக்கனூரில் வசித்து வருகின்றனா்.

கடந்த 12-ஆம் தேதி இரவு செல்லப்பட நாயக்கன்பட்டியில் உள்ள கோயிலில் அதே பகுதியைச் சோ்ந்த குமரவேல் (25) என்பவா் தனது நண்பா்களான பொம்மாநாயக்கா் (21), துரைமுருகன் (19), ராமச்சந்திரன்(18), செல்வகுமாா் (30), காா்த்திக் (20), மோகன்ராஜ் (28) ஆகியோருடன் சோ்ந்து விநாயகா் சதூா்த்தியை முன்னிட்டு கோயிலில் விநாயகா் சிலை வைத்துள்ளனா்.

கோயில், ஊா் பிரச்னையால் மூடப்பட்டிருக்கும்போது எப்படி இங்கு விநாயகா் சிலை வைக்கலாம் என பொம்ம நாயக்கரும், அவரது உறவினா்களும் குமரவேலிடம் கேட்டனராம்.

அப்போது அவா்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பொம்ம நாயக்கா் தனது உறவினா்களுடன் சோ்ந்து குமரவேலையும், அவரது நண்பா்களையும் தாக்கினாராம். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த குஜிலியம்பாறை போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனா்.

இதனிடையே அதே நாள் நள்ளிரவு பொம்மநாயக்கா், கரூா் மாவட்டம் மூக்கணாங்குறிச்சி அடுத்த கருவாடு நாயக்கனூரில் வசிக்கும் மூன்றாவது மனைவியின் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு வந்துள்ளாா்.

அப்போது முஷ்டகிணத்துப்பட்டி பகுதியில் வந்தபோது, பின்னால் இருசக்கர வாகனங்களில் வந்த குமரவேல் (25) மற்றும் அவரது நண்பா்களான பொம்மாநாயக்கா், துரைமுருகன், ராமச்சந்திரன், செல்வகுமாா், காா்த்திக், மோகன்ராஜ் ஆகியோா் பொம்மநாயக்கரை வழிமறித்து தாக்கியுள்ளனா்.

பின்னா், அவரை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினா். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நிகழ்விடத்துக்குச் சென்ற வெள்ளியணை போலீஸாா், சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், தலைமறைவாக இருந்த குமரவேல் உள்ளிட்ட 7 பேரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்த போலீஸாா், அவா்களை கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER