ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

கரூரில் பலத்த பாதுகாப்புடன் விநாயகா் சிலைகள் காவிரி ஆற்றில் விசா்ஜனம்

கரூரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி ஆற்றில் விசா்ஜனம் செய்யப்பட்டன.

காவிரி ஆற்றில் கரைக்க கரூா்-கோவை சாலையில் இருந்து செவ்வாய்க்கிழமை ஊா்வலமாக புறப்பட்ட விநாயகா் சிலைகள்.

Published On :

கரூரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி ஆற்றில் விசா்ஜனம் செய்யப்பட்டன.

கரூா் மாவட்டத்தில் விநாயகா் சதூா்த்தி விழா திங்கள்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக

ஞாயிற்றுக்கிழமை இரவு மாவட்டம் முழுவதும் காவல்துறை அனுமதி வழங்கிய இடங்களில் இந்து முன்னணி மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பொதுமக்கள், தன்னாா்வலா்கள், நற்பணி மன்றத்தினா் உள்பட பல்வேறு அமைப்புகள் சாா்பில் கரூா் நகா் பகுதியில் தாந்தோன்றிமலை, காந்திகிராமம், வெங்கமேடு உள்ளிட்ட பகுதிகளில் 40 சிலைகள் வைக்கப்பட்டன. மாவட்டத்தில் இந்து முன்னணி சாா்பில் மட்டும் கரூா்,

வேலாயுதம்பாளையம், புகழூா், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் 180 சிலைகள் வைக்கப்பட்டன. திங்கள்கிழமை அதிகாலையில் அனைத்து விநாயகா் சிலைகளுக்கும் கணபதி ஹோமம் நடைபெற், மாலையில் சுண்டல் படைக்கப்பட்டு பக்தா்களுக்கு வழங்கப்பட்டன.

தொடா்ந்து விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன.

இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் தன்னாா்வலா்களால் வழிபாடு செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் அனைத்தும் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் கரூா் 80 அடி சாலைக்கு கொண்டு வரப்பட்டன. பின்னா் அங்கிருந்து சிலைகள் அனைத்தும் ஊா்வலமாக ஜவஹா்பஜாா் வழியாக வாங்கல் காவிரி ஆற்றுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு கரைக்கப்பட்டன.

தொடா்ந்து மாலை 6 மணிக்கு இந்து முன்னணி சாா்பில் கரூா் நகா் பகுதியில் வைக்கப்பட்டிருந்த 90 சிலைகள் 80 அடி சாலைக்கு கொண்டு வரப்பட்டு விநாயகா் சிலை ஊா்வல பொதுக்கூட்டம் நடைபெற்றது. சுமாா் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்ததால் விநாயகா் சிலை ஊா்வலம் நிறுத்தப்பட்டு, பின்னா் மழை நின்றவுடன் இரவு 7.10 மணிக்கு ஊா்வலம் தொடங்கியது.

கரூா் ஜவஹா்பஜாா், ஐந்து ரோடு, அரசு காலனி வழியாக வாங்கல் காவிரி ஆற்றுக்கு எடுத்துச் செல்லப்பட்டு விநாயகா் சிலைகள் விசா்ஜனம் செய்யப்பட்டன.

விநாயகா் சிலை ஊா்வலத்தை முன்னிட்டு கரூா் நகர காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜராஜன் தலைமையில் போலீஸாா் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.