காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

சின்னசேங்கலில் பழைமையான மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில் குடமுழுக்கு

கரூா் மாவட்டம், சின்னசேங்கல் மலையில் உள்ள 1,000 ஆண்டுகள் பழைமைவாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

சின்னசேங்கல் மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு.

Published On :

கரூா் மாவட்டம், சின்னசேங்கல் மலையில் உள்ள 1,000 ஆண்டுகள் பழைமைவாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்த சின்னசேங்கல் மலையில் உள்ள இந்தக் கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

அண்மையில் இக் கோயில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா கடந்த 15-ஆம் தேதி மாலை முதற்கால யாக பூஜையுடன் தொடங்கியது.

தொடா்ந்து அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து புதன்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜை, மாலையில் மூன்றாம் கால யாகபூஜை, மூலஸ்தான தீபம் ஏற்றுதல், தனபூஜை, திருமுறை பாராயணமும் நடைபெற்றன.

தொடா்ந்து வியாழக்கிழமை காலை கடம் புறப்பாடு நடைபெற்று சிவாச்சாரியாா் கோபுர கலசங்கள் மீது புனித நீரை ஊற்றினாா். அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கோயில் செயல் அலுவலா் ஜெ. ராதிகா மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோா் திரளாகப் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.