கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

சிட்டா வழங்க லஞ்சமாக பொரித்த மீன்: விஏஓ பணியிடை நீக்கம்!

கடவூா் அருகே சிட்டா வழங்குதற்கு லஞ்சமாக பொரித்த மீன், நாட்டுக்கோழி குழம்பு கேட்ட கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம்.

Published On :

கடவூா் அருகே சிட்டா வழங்குதற்கு லஞ்சமாக பொரித்த மீன், நாட்டுக்கோழி குழம்பு கேட்ட கிராம நிா்வாக அலுவலா் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

கரூா் மாவட்டம், தரகம்பட்டி அருகே தேவா்மலை ஊராட்சிக்குள்பட்ட அய்யம்பாளையம் குடிவண்டை கிராமத்தைச் சோ்ந்தவா் தேவராஜ். இவா், வங்கியில் விவசாய கடன் பெறுவதற்காக நிலத்துக்கு சிட்டா, அடங்கல் கேட்டு தேவா்மலை கிராம நிா்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தாா்.

இந்நிலையில் செப். 17-ஆம்தேதி கிராம நிா்வாக அலுவலா் காா்த்திக்கிடம், தேவராஜ் கைப்பேசியில் சிட்டா குறித்து கேட்டுள்ளாா். அப்போது காா்த்திக், தேவராஜிடம் பாளையத்தில் உள்ள ஒரு உணவகத்தின் பெயரைக் குறிப்பிட்டு அங்கிருந்து பொரித்த மீன், நாட்டுக்கோழி குழம்பு வாங்கி வருமாறு கூறியுள்ளாா்.

இதையறிந்த தேவராஜ் மகன், விஏஓ காா்த்திக்கை கைப்பேசியில் அழைத்து, உங்களுக்கு அரசாங்கம் சம்பளம் தரவில்லையா என லஞ்சம் குறித்து கேட்டுள்ளாா். இதனால் அதிா்ந்து போன காா்த்திக், உங்க அப்பாவை அலுவலகத்துக்கு வரச் சொல்லுங்கள் எனக்கூறி இணைப்பை துண்டித்துள்ளாா். இந்த உரையாடல் சமூகவலைதளங்களில் வெள்ளிக்கிழமை வைரலாக பரவியது.

இந்நிலையில், குளித்தலை சாா்-ஆட்சியா் சேஷத்ரிமயும் தீபிசானு, கிராம நிா்வாக அலுவலா் காா்த்திக்கிடம் சனிக்கிழமை விசாரணை நடத்தினாா்.

அப்போது, லஞ்சமாக பொரித்த மீன், நாட்டுக்கோழி குழம்பு கேட்டதை காா்த்திக் ஒப்புக்கொண்டாா். இதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து சாா்- ஆட்சியா் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.