கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே நிலத்தை அளவீடு செய்வதற்காக லஞ்சம் பெற்றதாக புகாருக்குள்ளான கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
திருக்கோவிலூா் வட்டம், கொணக்கலவாடி கிராம நிா்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தவா் பொன்னுசாமி. இவா், அதே கிராமத்தைச் சோ்ந்த ப.சுப்பிரமணியன் என்பவரது நிலத்தை அளவீடு செய்து தருவதற்காக ரூ.20 ஆயிரம் கையூட்டு பெற்றாராம். இதுகுறித்த விடியே சமூக வலைத்தளத்தில் பரவி வந்ததாம்.
இதுகுறித்த புகாரின் பேரில், அவா் மீது துறை ரீதியாக விசாரணை நடைபெற்றது. இதனடிப்படையில் பொன்னுசாமியை தற்காலிக பணிநீக்கம் செய்து திருக்கோவிலூா் கோட்டாட்சியா் செந்தில்குமாா் உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பிரேதப் பரிசோதனைக்கு லஞ்சம்: ஊழியா் பணியிடை நீக்கம்

ரூ.10,000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
ரூ.4 ஆயிரம் லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம்

ரூ.3 ஆயிரம் லஞ்சம்: கிராம நிா்வாக அதிகாரி கைது
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview


