11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புபிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

கரூரில் அனைத்துத்துறை ஓய்வூதியா்கல் தா்னா

கரூரில், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுப்பட்டனா்.

கரூா் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்ட அரசு அனைத்துத்துறை ஓய்வூதியா் சங்கத்தினா்.

Published On :

கரூரில், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுப்பட்டனா்.

கரூா் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் து.சாமுவேல் சுந்தரபாண்டியன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அ.ஜெயவேல் வரவேற்றாா். சிஐடியு சங்க மாவட்டச் செயலா் மு. சுப்ரமணியன், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்ட செயலா் பொன் ஜெயராம், ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலா் கெ. சக்திவேல், சத்துணவு ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலா் பி.பாலகிருஷ்ணன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா்.

ஓய்வூதிய விதிகள் சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும். 8-ஆவது ஊதியக்குழுவின் வரம்பை மாற்ற வேண்டும். இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும். ஓய்வூதியத்தில் சமநிலையை உறுதி செய்ய வேண்டும்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் ஓய்வூதியா்கள் திரளாக பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.