உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

செப். 28-ல் கிராம உதவியாளர்கள் பணியிடங்களுக்கு நேர்காணல்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்தில் காலியாக உள்ள 3 கிராம உதவியாளர்கள் பணியிடங்களுக்கு செப். 28 அன்று குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற உள்ளது.

Published On :

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்தில் காலியாக உள்ள 3 கிராம உதவியாளர்கள் பணியிடங்களுக்கு செப். 28 அன்று குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற உள்ளது.

மேற்கண்ட பணியிடத்துக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். 21 வயது முதல் 30 வயதுக்குள்பட்டவராகவும், அட்டவணை வகுப்பினர் எனில் 35 வயதுக்குள்ளும், பிற்படுத்தப்பட்டோர், மி.பி மற்றும் சீர்மரபினர் எனில் 35 வயதுக்குள்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

நன்னடத்தை சான்று மற்றும் உடல் தகுதி சான்று சமர்பிப்பதோடு, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். இத்தகுதியுடைய நபர்கள் தங்களது அசல் சான்று ஆவணங்களுடன், 2 சான்றொப்பம் இடப்பட்ட நகல்களுடன் நேர்காணலில் பங்கேற்கலாம் என

குன்னம் வட்டாட்சியர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.