ஆசிய பாரா விளையாட்டு: பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்!அதி தீவிர புயலாகக் கரையைக் கடக்கும் ’அர்னாப்’: வானிலை ஆய்வு மையம் தகவல்!

பெரம்பலூர் ஆயுதப்படை வளாகத்தில் காவலர்களுக்கான பல்பொருள் அங்காடி

பெரம்பலூரில் காவல் துறையினருக்கு மலிவு விலையில் பொருள்களை விற்பனை செய்யும் வகையில், புதியதாக பல்பொருள் அங்காடி தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :

பெரம்பலூரில் காவல் துறையினருக்கு மலிவு விலையில் பொருள்களை விற்பனை செய்யும் வகையில், புதியதாக பல்பொருள் அங்காடி தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆயுதப்படை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள அங்காடியை தொடங்கி வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்த்ரா பேசியது: காவலர்களின் நலன் கருதி, தமிழக அரசு மலிவு விலையில் பொருள்கள் விற்பனை செய்யும் அங்காடியை தொடங்க உத்தரவிட்டது. இதில், காவலர்கள் மட்டுமின்றி ஓய்வு பெற்ற போலீஸார், சிறைத் துறை, தீயணைப்புத் துறை, வனத் துறையினரும் தங்களது குடும்பத்துக்கு தேவையானப் பொருள்களை வாங்கிப் பயன்பெறலாம். இங்கு, திங்கள்கிழமையை தவிர அனைத்து நாள்களிலும் விற்பனை நடைபெறும். காவலர்கள் அல்லது அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அடையாள அட்டையுடன் நேரில் வந்து பொருள்களை வாங்கிப் பயன்பெறலாம்.

இந்த அங்காடியில் காவலர்கள் ரூ. 3 ஆயிரம், துணைக் கண்காணிப்பாளர்கள் முதல் உதவி ஆய்வாளர்கள் வரை ரூ. 5 ஆயிரம், காவல் கண்காணிப்பாளர் மற்றும் அதற்கு மேல் உள்ள அதிகாரிகள் ரூ. 7 ஆயிரம் வரை மாதந்தோறும் பொருள்களை வாங்கலாம். இங்கு விற்கப்படும் பொருள்களுக்கு எந்தவித வரியும் கிடையாது. இதனால், பொருள்களின் விலை வெளிச் சந்தையைவிட குறைவாக இருக்கும். இதை காவலர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.