ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சேவை மையங்களுக்கு ரூ.1.50 கோடியில் வேளாண் கருவிகள்: ஆட்சியர் வழங்கினார்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 6 சேவை மையங்களுக்கு ரூ. 1.50 கோடி மதிப்பில் வேளாண் கருவிகளை மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

News image
Updated On :16 நவம்பர் 2017, 12:27 am

DIN

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 6 சேவை மையங்களுக்கு ரூ. 1.50 கோடி மதிப்பில் வேளாண் கருவிகளை மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
 மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சேவை மைய பொறுப்பாளர்களிடம் வேளாண் கருவிகளை வழங்கி, ஆட்சியர் சாந்தா பேசியதாவது:
 வட்டார அளவில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் பண்ணை கருவிகளுக்கான வாடகை சேவை மையங்களை, மானிய உதவியுடன் வேளாண்மைப் பொறியியல் துறை அமைத்து வருகிறது.
 இதில், ரூ.25 லட்சம் மதிப்பிலான வேளாண் இயந்திரங்கள் வாங்கப்படும்.
 அதில் ரூ. 10 லட்சம் அரசு மானியமாகும். இச்சேவை மையங்கள் மூலம், வட்டார அளவில் விவசாயிகள் தங்களது உழவு பணிகளுக்கு இக்கருவிகளை வாடகைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.  அதன்படி, வேப்பந்தட்டை வட்டத்தில் 3 சேவை மையத்துக்கும், வேப்பூர், பெரம்பலூர், ஆலத்தூர் ஆகிய ஒன்றியங்களில் தலா 1 சேவை மையத்துக்கும் என 6 சேவை மையங்களுக்கு ரூ. 1.50 கோடி மதிப்பில் ரூ. 60 லட்சம் மானியத்துடன் கூடிய வேளாண் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
 இத்திட்டத்தின் மூலம் வேளாண் இயந்திர வாடகை சேவை மையம் அமைக்க விரும்பும் விவசாயிகள்,
உதவி செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தை நேரிலோ அல்லது 04328- 224351 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்றார். இந்நிகழ்ச்சியில், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் சி. குணசேகரன், உதவி செயற்பொறியாளர் எஸ். சத்திய நாராயணன், உதவி பொறியாளர் நா. அறிவழகன் ஆகியோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.