தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்

பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், வரும் 21-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 8:41 pm

DIN

பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், வரும் 21-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.
பெங்களூர் அலிம்கோ நிறுவனத்தின் உதவியுடன் இந்த முகாம் நடைபெற உள்ளது. 
 அதன்படி, வரும் 21-ஆம் தேதி வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 22-ஆம் தேதி வேப்பந்தட்டை ஒன்றியம், வெங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 23-ஆம் தேதி ஆலத்தூர் ஒன்றியம் பாடாலூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 25 ஆம் தேதி பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற உள்ளது.
 இதில் மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, கைத்தாங்கி, சிறப்பு சக்கர நாற்காலி உள்ளிட்டவை வழங்கப்படவுள்ளன. மேலும், மாதாந்திர பராமரிப்பு நிதியுதவித் தொகை பெற தகுதியுடையோர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.  எனவே, மாற்றுத்திறனாளிகள் தங்களது தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் நகல், அண்மையில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வருமானச்சான்று நகல் ஆகிய ஆவணங்களுடன் பங்கேற்று பயன்பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.