தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்குஒன்றிய அளவிலான பயிற்சி மையங்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகள் அனைத்து வகையான போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில்,  ஒன்றிய

News image
Updated On :20 அக்டோபர் 2017, 1:58 am

DIN

பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகள் அனைத்து வகையான போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில்,  ஒன்றிய அளவிலான பயிற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளது என்று முதன்மைக் கல்வி அலுவலர் தி. அருள்மொழிதேவி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு, ஆதிதிராவிட நல மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2017- 18 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 பயின்று வரும் மாணவ, மாணவிகள், அனைத்து வகையான போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்வதற்கு வசதியாக ஒன்றிய அளவிலான பயிற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளது.
இப்பயிற்சி மையங்களில் பயிற்சி பெற விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் தங்களது பெயரை ‌w‌w‌w.‌t‌n‌s​c‌h‌o‌o‌l‌s.‌g‌o‌v.‌i‌n  என்னும் இணையதளம் மூலம், அந்தந்த பள்ளிகளிலேயே அக். 26 ஆம் தேதி வரை பதிவு செய்துகொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பதிவு செய்யும்போது, பயிற்சி பெற விரும்பும் பயிற்சி மையங்களை ஆன் லைனிலேயே தேர்வு செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.
எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆதிதிராவிட நல மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2017-  2018 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை அணுகி பயன்பெறலாம் என முதன்மை கல்வி அலுவலர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.