பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரியில், பயறுவகை சாகுபடி குறிப்புகளுக்கான வயல்வெளி விளக்கம் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரி முதல்வர் பேராசிரியர் எஸ். கீதா, பண்ணை குட்டை அமைத்தல் மற்றும் பயிர் சாகுபடிக்கு மேம்படுத்தப்பட்ட பயிர் ரகங்களின் முக்கியத்துவம், மரபியல் மற்றும் பயிர் இனப்பெருக்கத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர். ப. ராமகிருஷ்ணன், வேளாண் பல்கலை. மூலம் வெளியிடப்பட்ட உயர் விளைச்சல் தரக்கூடிய பயறு வகைகளின் முக்கிய பண்புகள் மற்றும் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்தும், விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் உதவி பேராசிரியர் ப. சுதா, உளுந்து பயிரில் இளம் பருவத்தில் வறட்சியைத் தாங்குவதற்காக பரிந்துரை செய்யப்படும் விதை கடினப்படுத்துதல் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்தும் பயிற்சி அளித்தனர்.
ஏற்பாடுகளை தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரி உதவி பேராசிரியர்கள் ஆ. செந்தில்குமார், என். பிரபு, மு. கலைச்செல்வி, பி. ராஜேந்திரன், முனைவர் முத்துகிருஷ்ணன், பண்ணை மேலாளர் இ. வித்யா ஆகியோர் செய்திருந்தனர். பயிற்சி முகாமில், பெரம்பலூர் மாவட்டத்தைச் விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா? - நிலையாமைக் கொண்டாடிய கவிஞர் கண்ணதாசன்!

நெல்லையப்பர் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா!
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!

ஜாக்கிரதை, நான் பேசினாலே பிரச்னைதான்: நடிகர் ரஜினிகாந்த்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


