பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண் துறை திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் வேளாண் இயக்குநர் வ. தட்சிணாமூர்த்தி.
ஆய்வில், வேப்பூர் வட்டாரம், பேரளி கிராமத்தில் நீடித்த நிலையான மானாவாரி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கினார்.
தொடர்ந்து, சித்தளி கிராமத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், நீடித்த நிலையான கரும்பு இயக்கத்தின் கீழ் ரூ. 75 ஆயிரம் மானியத்தில் அமைக்கப்பட்டுள்ள நிழல்வலைக் கூடத்தையும், கீழப்பெரம்பலூர் கிராமத்தில் கரும்பு பயிருக்கு பாரத பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சொட்டுநீர் பாசன அமைப்பையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட வேளாண்மை இயக்குநர் வ. தட்சிணாமூர்த்தி கூறியது:
பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுப்பண்ணையத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் 35 குழுக்களுக்கு ரூ. 5 லட்சம் மானியம் வீதம் வேளாண்மை இயந்திரங்கள் வாங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. நீடித்த நிலையான மானாவாரி திட்டத்தின் கீழ், 2 விவசாய உற்பத்தியாளர் குழுக்களுக்கு தலா ரூ. 10 லட்சம் மானியத்தில் வேளாண் விளைபொருள்களின் மதிப்புக் கூட்டு இயந்திர மையம் அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 2017- 18 ஆம் ஆண்டில் வேளாண் துறை மூலமாக ரூ. 852.10 லட்சம் மானியத்தில் சொட்டு நீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2017- 18 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரும் கூட்டுப்பண்ணைய திட்டத்தின் கீழ் இயங்கும் 19 குழுக்களுக்கு தலா ரூ. 5 லட்சம் மானியத்தில் 17 டிராக்டர்கள், 6 பவர் டில்லர்கள், 11 பவர் வீடர்கள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் (பொ) ஆ. அழகிரிசாமி முன்னிலையில் வேளாண்மை இயக்குநர் வழங்கினார்.
நிகழ்ச்சிகளில், வேளாண்மை துணை இயக்குநர் சந்தானகிருஷ்னன் உள்பட வேளாண்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் 1991: ராஜீவ் காந்தி படுகொலை; முதல்வரானார் ஜெயலலிதா!

நேட்டோ அமைப்பு எங்களுக்குத் தேவையில்லை: டிரம்ப் விமர்சனம்

திருச்சி மாவட்டத்தில் ரூ. 58.55 லட்சம் பறிமுதல்

ஸ்ரீரங்கம்: வெற்றியை எதிா்நோக்கும் அதிமுக
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

