ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

விடுதி பணியாளர்கள் சங்கக் கூட்டம்

தமிழகம் முழுவதும் சமையலர், காவலர் மற்றும் துப்புரவு பணியாளர் ஆகிய காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டுமென, விடுதி பணியாளர்கள் சங்க மாநில நிர்வாகக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Updated On :9 ஏப்ரல் 2018, 2:56 am

தமிழகம் முழுவதும் சமையலர், காவலர் மற்றும் துப்புரவு பணியாளர் ஆகிய காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டுமென, விடுதி பணியாளர்கள் சங்க மாநில நிர்வாகக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பெரம்பலூரில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளி, விடுதி பணியாளர் சங்கத்தின்  மாநிலக்குழு கூட்டம் மாநில நிறுவனர் ஆ. தங்கவேல் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநிலத் தலைவர் மு. ஆண்டியப்பன், மாநில பொதுச்செயலாளர் த. காமராஜ், மாநில பொருளாளர் ப. சுப்ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், தொகுப்பூதிய துப்புரவுப் பணியாளர்களை காலமுறை ஊதிய பணியாளர்களாக உயர்த்த வேண்டும். மாவட்டம் தோறும் சமையலர்கள், காவலர்கள் பணி மூப்பு பட்டியல் வெளியிட்டு, பதவி மாற்று வழங்க வேண்டும். அனைத்து விடுதிகளுக்கும் இரவு காவலர் நியமனம் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் ஒரு விடுதிக்கு 2 சமையலர் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  கூட்டத்தில், சங்க நிர்வாகிகள் ஜே. மணிமாறன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.