தமிழகம் முழுவதும் சமையலர், காவலர் மற்றும் துப்புரவு பணியாளர் ஆகிய காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டுமென, விடுதி பணியாளர்கள் சங்க மாநில நிர்வாகக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பெரம்பலூரில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளி, விடுதி பணியாளர் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் மாநில நிறுவனர் ஆ. தங்கவேல் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநிலத் தலைவர் மு. ஆண்டியப்பன், மாநில பொதுச்செயலாளர் த. காமராஜ், மாநில பொருளாளர் ப. சுப்ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், தொகுப்பூதிய துப்புரவுப் பணியாளர்களை காலமுறை ஊதிய பணியாளர்களாக உயர்த்த வேண்டும். மாவட்டம் தோறும் சமையலர்கள், காவலர்கள் பணி மூப்பு பட்டியல் வெளியிட்டு, பதவி மாற்று வழங்க வேண்டும். அனைத்து விடுதிகளுக்கும் இரவு காவலர் நியமனம் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் ஒரு விடுதிக்கு 2 சமையலர் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், சங்க நிர்வாகிகள் ஜே. மணிமாறன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொக்கராயன்பேட்டையில் தறித் தொழிலாளி தற்கொலை

வணிக சிலிண்டா் விலை உயா்வால் ஹோட்டல்களில் உணவு வகைகள் குறைப்பு: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

சிம்ஸ் பூங்கா பழக் காட்சி: போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் பெற அழைப்பு

இன்றைய ராசி பலன்கள் (02 மே 2026) 12 ராசிகளுக்கும்! விருச்சிக ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

