காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டிப்பது, ஏரி, குளங்களை தூர்வார மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்க வேண்டும். கடன் தள்ளுபடியை நிறுத்தி, விவசாய விளைபொருள்களுக்கு கட்டுப்படியான விலை கொடுக்க வேண்டும். ஒரு கிலோ நெல்லுக்கு ரூ. 40, பருத்திக்கு ரூ. 60, கரும்பு டன்னுக்கு ரூ. 6,000 வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் இந்த மறியல் நடைபெற்றது.
அகில இந்திய மக்கள் சேவை இயக்கத் தலைவர் தங்க. சண்முகசுந்தரம் தலைமையில் மறியல் செய்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க அரியலூர் மாவட்டத் தலைவர் மூ. மணியன், வேப்பூர் ஒன்றிய செயலர் மதியழகன் உள்ளிட்ட 3 பேரை பெரம்பலூர் போலீஸார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்ஸ்டாவில் பழகி 14 வயது சிறுவனுடன் 40 வயது பெண்மணி திருமணம்! -போலீஸில் புகார்
போர்நிறுத்த ஒப்பந்தம் உடனடியாக கையெழுத்தாகாது: ஈரான்

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!
நடிகர் மம்மூட்டிக்கு கௌரவ டாக்டர் பட்டம்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


