விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் சித்ரா பௌர்ணமி விழா

பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் சித்ரா பௌர்ணமி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 1:37 am

DIN

பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் சித்ரா பௌர்ணமி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
மதுரகாளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சென்னை கோட்டூர் ஸ்ரீமகாமேரு மண்டலி சார்பில்  நடத்தப்படும் சித்ரா பௌர்ணமி விழா சனிக்கிழமை காலை சண்டி ஹோமத்துடன் தொடங்கியது. இதையொட்டி, மூலவருக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு உச்சிகால சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட அம்பாள் உற்ஸவ சிலை தங்க ரத பாதையில் வைக்கப்பட்டு, சுமங்கலி பெண்கள் அகண்ட ஸ்ரீலலிதா சஹஸ்ரநாம குங்கும அர்ச்சனைகளில் ஈடுபட்டனர். மாலையில், மயிலாடுதுறை ராகவனின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. 2 ஆவது கால சண்டிஹோமம் மாலையுடன் நிறைவடைந்தது. தொடர்ந்து, சித்ரா பௌர்ணமி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரை 3 ஆவது கால ஸ்ரீசண்டிஹோமம் நடைபெறுகிறது. 
இதில், ஸ்ரீ ப்ரணவானந்த பரஹ்மேந்திர சரஸ்வதி அவதூத சுவாமிகள் பங்கேற்று பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதில், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பிரம்ம ரிஷி மலையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, சிறப்பு யாகம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.  அன்னை சித்தர் எஸ். ராஜ்குமார் சுவாமிகள் தலைமையில், வேப்பூர் திருநாவுக்கரசர் மடம் சிவனடியார்கள், திருவாரூர் ஆதி சிவனடியார் மட கலாநிதி சிவனடியார் ஆகியோர் முன்னிலையில், சித்ரா பவுர்ணமியையொட்டி சிறப்பு யாகமும், 210 சித்தர்கள் மற்றும் தமிழ் திருமுறை வேள்வியும் நடத்தப்பட்டது. பின்னர், 108 பெண்களுக்கு சேலைகளும், சாதுக்களுக்கு வஸ்திர தானமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில், மகளிர் மேம்பாட்டுத்துறை கூடுதல் இயக்குநர் சரஸ்வதி கணேசன், வழக்குரைஞர் இளவரசன், டெல்லி சுந்தர், சென்னை செகத்ராம்ஜி உள்பட சுற்றுவட்டார பொதுமக்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மகா சித்தர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.  
அரியலூர்...: அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் திருக்கோயிலில் கிரிவலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக திருப்பனந்தாள் காசி மடாதிபதி முத்துக்குமாரசாமி தம்பிரான் கிரிவலத்தை தொடக்கி வைத்தார். கிரிவலத்தை முன்னிட்டு கணக்கவிநாயகருக்கு அபிஷேகமும், பிரகதீஸ்வரருக்கு சந்தனம், பால் திரவியப்பொடி, பஞ்சாமிர்தம், இளநீர், தேன் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து, மாலையில் சிவனடியார்களால் தேவாரம், திருவாசகம் பாடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.