தமிழ்த்தாய்க்கு மலர் தூவி மரியாதை
பெரம்பலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தமிழ்த் தாய்க்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


பெரம்பலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தமிழ்த் தாய்க்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் சாமி. இளங்கோவன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் சி. சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். தேசிய செயற்குழு உறுப்பினர் எம். சிவசுப்ரமணியம் சித்ரா பௌர்ணமியின் சிறப்புகள் மற்றும் தமிழ்த்தாயின் பெருமைகள் குறித்து விளக்கி, தமிழ்த்தாய் உருவப் படத்துக்கு மலர் துவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, பொறுப்பாளர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர், தமிழ்த் தாயைப் போற்றுவோம், தமிழகத்தை உயர்த்துவோம் என முழக்கமிட்டனர்.
இந்நிகழ்ச்சியில், கட்சிப் பொறுப்பாளர்கள் ஈஸ்வர். மணி, சாமிநாதன், முருகேசன், சேகர், முத்தமிழ்ச்செல்வன், சித்த மருத்துவர் வேல்முருகன், தர்மராஜ், சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...