பாவேந்தர் பாரதிதாசன் சிலைக்கு மாலை அணிவிப்பு
பாவேந்தர் பாரதிதாசன் 128 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, பெரம்பலூர் புறநகர்ப் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை அணிவிக்கப்பட்டது.


பாவேந்தர் பாரதிதாசன் 128 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, பெரம்பலூர் புறநகர்ப் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை அணிவிக்கப்பட்டது.
பெரம்பலூர் பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவை சார்பில், பெரம்பலூர் புறநகர்ப் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பாவேந்தர் பாரதிதாசன் சிலை எதிரே, அவரது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பேரவைத் தலைவர் வேல். இளங்கோ தலைமையில், செயலர் ஓவியர் கி. முகுந்தன் முன்னிலையில் பாவேந்தர் பாரதிதாசன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.பின்னர், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மணப்பாறை திருக்குறள் புலவர் நாவை சிவம், முனைவர் பொன்னொளியனார் ஆகியோர் பாவேந்தரின் சிறப்புகள் குறித்தும், அவரது பாடல்களின் மாண்பையும் விளக்கிப் பேசினர். இந்நிகழ்ச்சியில், பொருளாளர் புலவர் செம்பியன், இணைச் செயலர்கள் சிங்காரவேலு, சிவானந்தம், தமிழ்ச்செம்மல் விருதுபெற்ற முனைவர் க. பெரியசாமி, ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் வை. தேனரசன், மருத்துவ கவிஞர் கோசிபா, நிர்வாகிகள் செந்தமிழ் வேந்தன், துரை. மகேந்திரன், நல்லையா, கவிஞர் கெளதமன் நீல்ராசு, பக்கிரிசாமி, முத்துசாமி, லட்சுமணன், நூலகர் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.துணை செயலர் கவிஞர் சிற்றரசு நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...