
மருத்துவத் துறையினரே உடல்நலனில் அக்கறை செலுத்துவதில்லை: மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி
மருத்துவத் துறையை சார்ந்தவர்களே உடல்நலனில் அக்கறை செலுத்துவதில்லை என்றார் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எஸ். பாலராஜமாணிக்கம்.
மருத்துவத் துறையை சார்ந்தவர்களே உடல்நலனில் அக்கறை செலுத்துவதில்லை என்றார் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எஸ். பாலராஜமாணிக்கம்.
பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு, தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமை தொடக்கி வைத்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.பாலராஜமாணிக்கம் பேசியது:
50 சதவீதத்துக்கும் மேற்பட்ட மருத்துவ துறையை சார்ந்தவர்கள் தங்களது உடல்நலத்தில் அக்கறை செலுத்துவதில்லை. அரசு அலுவலர்கள், வழக்குரைஞர்கள், பொதுமக்கள் அனைவரும் தங்களது உடல் நலத்தை காத்துக் கொள்ள வேண்டும்.
அதற்கு இதுபோன்ற மருத்துவ முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு சிறுவயது முதல் நல்ல பழக்கங்களை சொல்லிக் கொடுத்து விளையாட்டில் ஈடுபடுத்தினால் எதிர்காலம் வளமாக இருக்கும்.
இனிவரும் காலங்களில் மருத்து முகாம்கள் அதிக எண்ணிக்கையில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து நடைபெற்ற முகாமில், பொது மருத்துவர் விஜய் ஆனந்த், நெஞ்சக நிபுணர் பிரகாஷ், கண் மருத்துவர் பிரகாஷ், மகப்பேறு மருத்துவர் சிவரஞ்சனி ஆகியோர் கொண்ட மருத்துவக் குழுவினர், பொதுமக்கள், வழக்குரைஞர்கள், நீதிமன்ற ஊழியர்களுக்கு மருத்துவ ஆலோசனை, சிகிச்சை அளித்தனர்.
மகிளா நீதிமன்ற நீதிபதி என்.விஜயகாந்த், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பி.ஜி. சங்கரநாராயணன், தலைமை நீதித்துறை நடுவர் ஏ.முரளீதரன், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலரும், சார்பு நீதிபதிபதியுமான எம்.வினோதா, நீதித்துறை நடுவர் கே.மோகனப்பிரியா, மாவட்ட உரிமையியல் நீதிபதி சி.கருப்பசாமி, வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் இ. வள்ளுவன்நம்பி, அட்வகேட் அசோசியேசன் சங்கத் தலைவர் ஏ.முகமது இலியாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாக அலுவலர் வெள்ளைச்சாமி, தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





