பெரம்பலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், பாலக்கரை பகுதியில உள்ள கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட அவைத் தலைவர் அ. நடராஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சி. ராஜேந்திரன், கிராமங்கள்தோறும் ஊராட்சி சபைக் கூட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில், கட்சி தலைமைக் கழகம் அறிவித்துள்ளவாறு ஊராட்சி சபைக்கூட்டம் நடத்துவது. புதிய உறுப்பினர்கள் அனைவருக்கும் அட்டைகள் வழங்குவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாநில நிர்வாகிகள் பா. துரைசாமி, வி.எஸ்.பெரியசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் வீ. வெள்ளச்சாமி, என். ஜெகதீஸ்வரன், சிவக்குமார், பட்டுச்செல்வி ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலர்கள் நூருல்ஹிதா இஸ்மாயில், பாஸ்கர், ஒன்றியச் செயலர்கள் என். கிருஷ்ணமூர்த்தி, எஸ். அண்ணாதுரை, எஸ். நல்லதம்பி, தி. மதியழகன், ஒன்றிய பொறுப்பாளர்கள் வீ. ஜெகதீசன், சோமு. மதியழகன், நகரச் செயலர் எம். பிரபாகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் செ. ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராமதாஸின் மகள் காந்திமதி, பெயரன் முகுந்தன் என்.ஆர். காங்கிரஸில் இணைகிறார்கள்!

அண்ணா பல்கலை. மாணவா் சோ்க்கைக்கு லஞ்சம்: இருவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து
நீட் தோ்வு - சாதக, பாதகங்கள், மாற்றுத் தீா்வுகள்!

பிரதானின் அரசியல் பயணத்தில் எதிா்பாராத சறுக்கல்...
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


