பெரம்பலூர் அருகே மூவருக்கு வெட்டு: 5 பேர் கைது
பெரம்பலூர் கோஷ்டி மோதலில் 3 பேரை அரிவாளால் வெட்டியது தொடர்பாக 5 பேரை பெரம்பலூர் போலீஸார் கைது செய்தனர்.


பெரம்பலூர் கோஷ்டி மோதலில் 3 பேரை அரிவாளால் வெட்டியது தொடர்பாக 5 பேரை பெரம்பலூர் போலீஸார் கைது செய்தனர்.
பெரம்பலூர் அருகேயுள்ள வடக்குமாதவி கிராமம், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் சுதா (27). இவருக்கும், உறவினர்களான அழகுதுரை உள்ளிட்டோருக்கும் ஆடு விற்பனையில் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்ததாம். இந்நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே சனிக்கிழமை மாலை மோதலில் சுதா, இவரது தம்பி மணிகண்டன் (20), காசிராஜன் ஆகியோரை அழகுதுரை தரப்பினர் அரிவாளால் வெட்டினராம். இதுகுறித்து, சுதா அளித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து அழகுதுரை (43), செந்தில்குமார் (33), கலைச்செல்வி (35), பூபதி (27), முத்தழகி (33) ஆகியோரைக் கைது செய்து ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...