தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பெரம்பலூர், அரியலூரில் கணக்கெடுப்பு: நெசவாளர்கள் தவறாது பதிய வேண்டும்

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நெசவாளர்கள், அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற 4 ஆவது தேசிய கைத்தறி கணக்கெடுப்பில்

Updated On :9 ஜூலை 2018, 2:52 am

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நெசவாளர்கள், அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற 4 ஆவது தேசிய கைத்தறி கணக்கெடுப்பில் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் (பொ) ஆ. அழகிரிசாமி. 
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூர் மாவட்டத்தில் 4-வது தேசிய கைத்தறி கணக்கெடுப்புப் பணி தற்போது நடைபெற்று வருகிறது. தகுதிபெற்ற நெசவாளர்கள், இதுவரை கணக்கெடுப்பில் தங்களது பெயரை பதிவு செய்யாமல் இருந்தால் பதிவு செய்து கொள்ளலாம். நெசவாளர் கணக்கெடுப்பில் சேர்க்கப்படாதோர் அரசு நலத்திட்ட உதவிகளை பெற இயலாத சூழ்நிலை ஏற்படும். மேலும் விவரங்களுக்கு, நெசவாளர்கள் அருகே உள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை அணுகி கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம். 
அரியலூர் மாவட்டத்தில் 1.12.2017 முதல் தேசிய கைத்தறி கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. வரும் 10.7.2018 முடிய கணக்கெடுப்புப் பணி நடைபெற உள்ளது. தகுதிபெற்ற நெசவாளர்கள் கணக்கெடுப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து தங்கள் பெயரைப் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு, கும்பகோணம் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநர் அலுவலகத் தொலைபேசி (0435 2461736) எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.