தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

பெரம்பலூரில் மகளிருக்கு 1 மாத இலவச தையல் பயிற்சி

பெரம்பலூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் பெண்களுக்கான இலவச தையல் கலை பயிற்சி பெற அழைப்பு விடுத்துள்ளார் அதன் இயக்குநர் ஜே. அகல்யா.

Updated On :29 மார்ச் 2018, 1:31 am

பெரம்பலூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் பெண்களுக்கான இலவச தையல் கலை பயிற்சி பெற அழைப்பு விடுத்துள்ளார் அதன் இயக்குநர் ஜே. அகல்யா.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் ஏப். 4 ஆம் தேதி முதல், தையல் கலைப் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது.  இப் பயிற்சி பெற 18 வயதுக்கு மேற்பட்ட 45-க்கு குறைவான, குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு படித்தவராக இருக்க வேண்டும்.  பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும், சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருக்க வேண்டும்.  தொடர்ந்து 30 நாள்கள் காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் பயிற்சியின்போது, காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.  
விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் ஐ.ஓ.பி வங்கியின் மாடியில் உள்ள ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குநரிடம் விண்ணப்பிக்கவும்.   ஏப். 2 ஆம் தேதி நடைபெறும்  நேர்முகத் தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வு நடைபெறும்.   மேலும் விவரங்களுக்கு, ஐ.ஓ.பி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம், ஷெரீப் காம்ப்ளக்ஸ், பெரம்பலூர் - 621212 அல்லது  04328 277896.          

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.