பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வயலப்பாடி கிராமத்தில் 1,500-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இட நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்கள், இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி கடந்த 25.5.1985- இல்அப்போதைய முதல்வரிடம் கோரிக்கை விடுத்தனர்.
அதனடிப்படையில், தமிழக அரசால் 4.41 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. மீதமுள்ள 1.99 ஏக்கர் நிலத்துக்கு அப்பகுதியைச் சேர்ந்த தனி நபர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 2013 ஆம் ஆண்டில் ஆதிதிராவிட இன மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கிட நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், வயலப்பாடி கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
போராட்டத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலர் சி. தமிழ்மாணிக்கம், மாநில நிர்வாகி வீர. செங்கோலன், மதிமுக மாவட்ட செயலர் சி. துரைராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தகவலறிந்த பெரம்பலூர் மாவட்ட ஆதிதிராவிட நல தனி வட்டாட்சியர் காமாட்சி அங்குசென்று, பேச்சுவார்த்தை மேற்கொண்டார். இதில், சம்பந்தப்பட்ட இடத்துக்கான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால், ஒரு வார காலத்துக்குள் உரிய தீர்வு அளிக்கப்படும் எனத் தெரிவித்தார். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எஸ்பிஐ வங்கியில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

கள்ளழகர் தீர்த்தவாரி வைபவ உற்சவம்!

சென்னையில் வணிக சிலிண்டர் விலை ரூ.3,237! அப்போ ஒரு டீ விலை?

திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

