சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

மே 24 முதல் வட்டாட்சியர் அலுவலகங்களில் ஜமாபந்தி

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் மே 24 ஆம் தேதி முதல் வருவாய் தீர்வாயம் எனும் ஜமாபந்தி நடைபெற உள்ளன எனத் தெரிவித்துள்ளார் ஆட்சியர் வே. சாந்தா. 

Updated On :21 மே 2018, 1:45 am

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் மே 24 ஆம் தேதி முதல் வருவாய் தீர்வாயம் எனும் ஜமாபந்தி நடைபெற உள்ளன எனத் தெரிவித்துள்ளார் ஆட்சியர் வே. சாந்தா. 
பெரம்பலூர் வட்டத்துக்குள்பட்ட வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம், பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் தலைமையில் நடைபெறும். மே 24 ஆம் தேதி குரும்பலூர் உள் வட்டத்துக்குள்பட்ட குரும்பலூர் (தெ- வ), மேலப்புலியூர் (கி- மே), லாடபுரம் (கி- மே), அம்மாபாளையம், களரம்பட்டி, சத்திரமனை ஆகிய வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு நடைபெறுகிறது. 
குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி தலைமையில், வடக்கலூர் உள் வட்டத்துக்குள்பட்ட திருமாந்துறை, பெண்ணகோணம் (வ- தெ), வடக்கலூர், ஒகளூர் (மே- கி), சு.ஆடுதுறை, அத்தியூர் (வ- மே), கிழுமத்தூர் (தெ- வ), அகரம் சிகூர் ஆகிய கிராமங்களுக்கு நடைபெறுகிறது. 
வேப்பந்தட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) விஜயலட்சுமி தலைமையில் வெங்கலம் உள் வட்டத்துக்குள்பட்ட உடும்பியம், பூலாம்பாடி (கி- மே), வெங்கனூர், தழுதாழை, அரும்பாவூர், மலையாளப்பட்டி, தொண்டமாந்துறை (மே- கி), வெங்கலம் (மே) ஆகிய கிராமங்களுக்கு நடைபெறும்.
ஆலத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கலால் உதவி ஆணையர் சேதுராமன் தலைமையில் நாரணமங்கலம், நாட்டார்மங்கலம், செட்டிக்குளம், மாவிலங்கை, சிறுவயலூர், நக்கசேலம், எலந்தலப்பட்டி, து.களத்தூர், புது அம்மாபாளையம், கண்ணப்பாடி ஆகிய கிராமங்களுக்கு நடைபெறுகிறது.
ஜமாபந்தி இறுதி நாளான 30 ஆம் தேதி சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில், விவசாயிகள் மாநாடு, அந்தந்த வருவாய் தீர்வாய அலுவலர்கள் தலைமையில் நடைபெறும். எனவே, பொதுமக்கள் பட்டா, பட்டா மாறுதல், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை அளித்து உடனடித் தீர்வு கண்டு பயன்பெறலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.