கரூரில் உதவியது யார்? ஓடியது யார்? - முதல்வர் விஜய் பேச்சுக்கு கனிமொழி கண்டனம்!கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்
/

மே 28 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்யலாம்

எஸ்.எஸ்.எல்.சி அரசுப் பொதுத்தேர்வு எழுதியவர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மே 28 ஆம் தேதி பிற்பகல் முதல் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றார்

Updated On :25 மே 2018, 4:08 am IST

எஸ்.எஸ்.எல்.சி அரசுப் பொதுத்தேர்வு எழுதியவர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மே 28 ஆம் தேதி பிற்பகல் முதல் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றார் முதன்மைக் கல்வி அலுவலர் தி. அருள்மொழிதேவி.
எஸ்.எஸ்.எல்.சி அரசுப் பொதுத்தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியானது. இதற்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மே 28 ஆம் தேதி பிற்பகல் முதல் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், தங்களது பிறந்த தேதி, பதிவு எண் ஆகிய விவரங்களை இணையதளத்தில் அளித்து தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், வியாழக்கிழமை (மே 24) முதல் 26 ஆம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
மறுகூட்டலுக்கான கட்டணத்தை பள்ளி/ தேர்வு மையத்திலும் பணமாக செலுத்த வேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் மறு கூட்டல் முடிவுகளை அறிந்து கொள்ள இயலும்.
ஜூன் 28 ஆம் தேதி முதல் சிறப்பு துணை பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.