நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

உயிர்நீத்த காவலர்களுக்கு வீரவணக்க நாள் அனுசரிப்பு

பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவலர் வீரவணக்க

Updated On :22 அக்டோபர் 2018, 3:49 am

பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 
காவல் துறையில் பணியில் இருந்தபோது உயிரிழந்த காவலர்கள் நினைவாக வீரவணக்க அஞ்சலி செலுத்தும் நாளாக அக். 21 ஆம் தேதி 
நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. திபெத் எல்லையில் கடந்த 1959 ஆம் ஆண்டு நடைபெற்ற சண்டையின் போது எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த 20 காவலர்கள் வீரமரணமடைந்தனர். இந்தச் சம்பவத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் அக். 21 ஆம் தேதி பணியின் போது உயிர்நீத்த காவலர்களுக்கு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில்,  நாடு முழுவதும் கடந்த ஆண்டு பணியின் போது உயிர்நீத்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பெரம்பலூர் அருகே தண்ணீர்பந்தல் பகுதியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட காவல் கண்காணிகப்பாளர் திஷா மித்தல், காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, உயிர்நீத்த காவலர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதில், கூடுதல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல் துறையினர் பலர் பங்கேற்றனர்.     
அரியலூர்:  காவல் துறை உள்ளிட்ட காவல் படைகளில் பணியாற்றி வீரமரணம் அடைந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அக்.21ஆம் தேதி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.  அதன்படி ஞாயிற்றுக்கிழமை அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
ஆளிநர்களைக் கொண்டு 60 குண்டுகள் முழங்க அங்குள்ள நீத்தார் நினைவு தூணுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிநவ் குமார் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.தொடர்ந்து ஆயுதப்படை ஆய்வாளர் குமரன், காவல் துணை கண்காணிப்பாளர் மோகன்தாஸ், பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் மேகலா மற்றும் காவல் ஆய்வாளர்கள், தீயணைப்பு படைவீரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு  மரியாதை செலுத்தினர்.                                         
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.