பெரம்பலூர் அருகே இரும்புக் கம்பிகள் திருடிய நபரைப் பெரம்பலூர் போலீஸார் கைது செய்து, சனிக்கிழமை இரவு சிறையில் அடைத்தனர்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் வயல்வெளிகளில் இருந்து கால்நடைகள் சாலைகளுக்கு வருவதைத் தவிர்க்கும் வகையில், இருபுறமும் இரும்பு கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக அந்த கம்பிகளை மர்ம நபர்கள் அறுத்து திருடிச் சென்றனர். இதுகுறித்து, சாலை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் அலுவலர்கள் பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுதொடர்பாக, பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூர் காலனி தெருவைச் சேர்ந்த மூக்கன் மகன் முனியன் (57) என்பவர் திருடியது தெரியவந்தது.
இதையடுத்து, முனியனைக் கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து சுமார் 50 கிலோ இரும்பு கம்பிகளைப் பறிமுதல் செய்தனர். பின்னர், பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முனியனை, திருச்சி மத்திய சிறையில் சனிக்கிழமை இரவு அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வெற்றிலை சர்பத்

குட்டித் தூக்கம் போடுபவர்களுக்காக போட்டி நடத்திய தென் கொரியா!

நமன் திர் அரைசதம்; சிஎஸ்கேவுக்கு 160 ரன்கள் இலக்கு!
பிருத்விராஜின் கலிஃபா வெளியீட்டுத் தேதி!
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

