பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

மக்காச்சோளப் பயிர்களுக்கு நஷ்டஈடுகோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் படைப்புழுத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளப் பயிர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கக்

Updated On :23 ஜனவரி 2019, 7:26 am IST

பெரம்பலூர் மாவட்டத்தில் படைப்புழுத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளப் பயிர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
மானாவாரியாக சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட மக்காச்சோளத்துக்கு, ஹெக்டேருக்கு ரூ. 7,410  மும், இறவை சாகுபடிக்கு ரூ. 13,500- மும் நஷ்ட ஈடு வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது போதுமானதல்ல.
 உற்பத்தி செலவின் அடிப்படையில், நஷ்ட ஈடுத்தொகையை ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தி வழங்கிட வேண்டும். அனைத்து வங்கிகளிலும் பெற்ற விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யவேண்டும். தேசிய விதைக் கழகம் மூலம் தரமான விதைகள் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி பெரம்பலுர் புறநகர்ப் பேருந்து நிலையம் அருகில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர்  ஏ.கே. ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் சின்னசாமி, மாவட்டத் துணை நிர்வாகிகள் விநாயகம், கோவிந்தன்  முன்னிலை வகித்தனர். 
சங்கத்தின் மாநிலச் செயலர் சாமி. நடராஜன், மாவட்டச் செயலர் என். செல்லதுரை ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஏ. கலையரசி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் பி. ரமேஷ், மாவட்டத் துணை நிர்வாகிகள் பொன்னுசாமி, மணி, கண்ணன் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.                                                   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.