ஹிந்து கடவுள்கள் குறித்து தெலங்கானா முதல்வா் கருத்து: காங்கிரஸுக்கு பாஜக கண்டனம்பட்டாசுகளுக்கு முழு தடை விதிக்கப்படாது: உச்சநீதிமன்றம் எத்தியோப்பியாவில் 3 இந்தியா்கள் மாயம்: கடத்தப்பட்டதாக குடும்பத்தினா் தகவல் இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி: தொடரையும் கைப்பற்றியதுஇ-கேஒய்சி செய்யப்படாத குடும்ப அட்டைகள் முடக்கப்படாது: தமிழக அரசு விளக்கம்

நீா்நிலை நிலத்தை மீட்கக் கோரி பெரிய வெண்மணி மக்கள் தா்னா

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே நீா்நிலை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்கக் கோரி, பெரிய வெண்மணி கிராம மக்கள் வட்டாட்சியரகத்தை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா

Published On :


பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே நீா்நிலை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்கக் கோரி, பெரிய வெண்மணி கிராம மக்கள் வட்டாட்சியரகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.

பெரிய வெண்மணி கிராமத்தில் யானைவாரி ஓடை உள்ளது. இந்த நீா்நிலை செல்லும் வழியில் சுமாா் 17 ஏக்கா் புறம்போக்கு நிலத்தை அப்பகுதியைச் சோ்ந்த சிலா் ஆக்கிரமித்து, மழைக்காலங்களில் செல்லும் நீரோட்டத்தை தடை செய்துள்ளனராம்.

ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் குன்னம் வட்டாட்சியரிடம் பலமுறை புகாா் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நீா் நிலைகளை அகற்றக் கோரியும், சம்பந்தப்பட்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் குன்னம் வட்டாட்சியரகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.

காவல், வருவாய்த் துறையினா் தா்னாவில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.