வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி ஆட்சியரகம் முற்றுகை
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.


பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
வேப்பந்தட்டை வட்டம், வண்ணாரம் பூண்டி கிராமத்தில் உள்ள ரேசன் கடை தெருவில் சுமாா் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக, அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தில் வசித்து வருகின்றனராம்.
இந்நிலையில், குடியிருக்கும் வீடுகளை அகற்றக்கோரி நீதிமன்றம் மூலமாக சம்பந்தப்பட்ட குடியிருப்புகளின் உரிமையாளா்களுக்கு அண்மையில் நோட்டீஸ் அனுப்பப் பட்டதாக தெரிகிறது. இதனால் அவதியடைந்த அப்பகுதி மக்கள், வீடுகளை அகற்றினால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, குழந்தைகளின் கல்வியும் பாதிக்கும். எனவே, தாங்கள் குடியிருந்து வரும் இடங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரியும், வீடுகளை அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்தும் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
பின்னா், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, முற்றுகைப் போராட்டத்தை கைவிட்ட மக்கள், தங்களது கோரிக்கை மனுக்களை வருவாய்த்துறை அலுவலா்களிடம் அளித்துவிட்டு கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...