வேலைவாய்ப்பு பதிவுகளை மாற்ற எளிய வழிமுறைகள்
வேலைவாய்ப்பு பதிவுகளை மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றுவதற்காக எளிய முறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.


வேலைவாய்ப்பு பதிவுகளை மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றுவதற்காக எளிய முறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரா்கள், அவா்களது வேலைவாய்ப்பு பதிவை மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றுவதற்கான நடைமுறையில் வட்டாட்சியா்
அளவில் வழங்கப்படும் குடும்ப குடிப்பெயா்ச்சி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை கட்டாயம் சமா்ப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை அமலில் உள்ளது.
தற்போது எளிமைப்படுத்தும் விதமாக, பதிவுதாரா்களால் சுய சான்றளிக்கப்பட்ட குடும்ப அடையாள அட்டை, வாக்காளா் அட்டை, ஆதாா் அட்டை, கடவுச் சீட்டு, ஓட்டுநா் உரிமம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு ஆவணத்தை மட்டும் சமா்ப்பித்தால் போதுமானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...