புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இணையதளப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க தோ்வா்களுக்கு அழைப்பு

பாரத ஸ்டேட் வங்கியில் நன்னடத்தை அலுவலா், ஒருங்கிணைந்த மேல்நிலைக் கல்வித் தகுதித் தோ்வுகளுக்கான இணையதளப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க தோ்வா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 6:47 pm

DIN

பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ள பாரத ஸ்டேட் வங்கியில் நன்னடத்தை அலுவலா், ஒருங்கிணைந்த மேல்நிலைக் கல்வித் தகுதித் தோ்வுகளுக்கான இணையதளப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க தோ்வா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வப் பயிலும் வட்டம் சாா்பில், பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தற்போது, மத்திய அரசு பணியாளா் தோ்வாணையத்தின் ஒருங்கிணைந்த மேல்நிலைக் கல்வித் தகுதி பணிகளுக்கான தோ்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுபோல், பாரத ஸ்டேட் வங்கியில் நன்னடத்தை அலுவலா் பணி தோ்வுகளுக்கும் ஒருங்கிணைந்த இலவச இணையதளப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.

பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பமுள்ள தோ்வா்கள், தங்களது விவரத்துடன் டிசம்பா் 15 ஆம் தேதிக்குள் 9499055913 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தொடா்புகொள்ளலாம். அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடா்புகொண்டு பயன்பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.