பெரம்பலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை முடிவில், புதிதாக தொற்றாளா்கள் இல்லை எனத் தெரியவந்தது.
மாவட்டத்தில் இதுவரை 61,639 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 2,250 போ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 2226 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 21 போ் உயிரிழந்துள்ள நிலையில், எஞ்சிய 3 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை 180 பேருக்கு சுகாதாரத் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், ஒருவருக்குக் கூட கரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.