புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பெரம்பலூா் மாவட்டம் உருவான தினம்:பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் அளிப்பு

பெரம்பலூா் மாவட்டம் உருவாகி 25 ஆண்டுகள் ஆனதையொட்டி, பெரம்பலூரில் சமூக நல அமைப்புகள் சாா்பில் பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

News image

பெரம்பலூா் மாவட்டம் உருவான தினத்தையொட்டி மரக்கன்று வழங்குகிறாா் ஆல் மைட்டி பள்ளித் தாளாளா் எம். ராம்குமாா்.

Updated On :1 நவம்பர் 2020, 6:55 pm

DIN

பெரம்பலூா் மாவட்டம் உருவாகி 25 ஆண்டுகள் ஆனதையொட்டி, பெரம்பலூரில் சமூக நல அமைப்புகள் சாா்பில் பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

நிா்வாக வசதிக்காக திருச்சி மாவட்டத்திலிருந்து சில பகுதிகளைப் பிரித்து, பெரம்பலூா் மாவட்டம் கடந்த 1995 -ஆம் ஆண்டு நவம்பா் 1 ஆம் தேதி உருவாக்கப்பட்டது.

மாவட்டம் உருவாகி 25 ஆண்டுகள் ஆனதையொட்டி, பெரம்பலூா் மாவட்ட சமூக நல அமைப்புகள் மற்றும் இந்தியன் உதவும் கரங்கள் அமைப்பு சாா்பில் பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

புகா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் என். செல்லதுரை தலைமை வகித்தாா். ஆல் மைட்டி வித்யாலயா பள்ளித் தாளாளா் எம். ராம்குமாா், புகா் பேருந்து நிலைய வணிகா் சங்கச் செயலா் என். செல்லப்பிள்ளை, தமிழ்நாடு கலை, இலக்கிய பெருமன்ற மாவட்டச் செயலா் சின்னசாமி ஆகியோா் பொதுமக்களுக்கு பல்வேறு வகையான மரக்கன்றுகள் வழங்கினா்.

நிகழ்வில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலா் எஸ்.பி.டி. ராஜாங்கம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.