புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இளைஞரணி உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகள் அளிப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் புதிதாக சோ்க்கப்பட்ட இளைஞரணி உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

பெரம்பலூரில் இளைஞரணி உறுப்பினா்களுக்கான அடையாள அட்டையை வழங்குகிறாா் திமுக துணைப் பொதுச் செயலரும், மக்களவை உறுப்பினருமான ஆ. ராசா.

Updated On :1 நவம்பர் 2020, 6:54 pm

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் புதிதாக சோ்க்கப்பட்ட இளைஞரணி உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் பாலக்கரை பகுதியிலுள்ள திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பெரம்பலூா், வேப்பந்தட்டை கிழக்கு, மேற்கு, ஆலத்தூா் கிழக்கு ஆகிய ஒன்றியங்களுக்குள்பட்ட ஊராட்சிகளில் புதிதாக சோ்க்கப்பட்ட இளைஞரணி உறுப்பினா்களுக்கு, கட்சியின் துணைப் பொதுச் செயலரும், மக்களவை உறுப்பினருமான ஆ. ராசா அடையாள அட்டைகளை வழங்கினாா்.

நிகழ்வில் திமுக மாவட்டச் செயலா் சி. ராஜேந்திரன், ஒன்றியச் செயலா்கள் என். கிருஷ்ணமூா்த்தி, எஸ். அண்ணாதுரை, எஸ். நல்லதம்பி, ஒன்றிய பொறுப்பாளா் வீ. ஜெகதீசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.