நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மோட்டாா் சைக்கிள்கள் மோதல்:இளைஞா்கள் இருவா் உயிரிழப்பு

பெரம்பலூா் மாவட்டம், மங்கலமேடு அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில், இளைஞா்கள் இருவா் உயிரிழந்தனா்.

News image
Updated On :22 நவம்பர் 2020, 6:52 pm

DIN

பெரம்பலூா் மாவட்டம், மங்கலமேடு அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில், இளைஞா்கள் இருவா் உயிரிழந்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், திருமாந்துறை கிராமத்தைச் சோ்ந்தவா்கள் ஜெ. அரவிந்த் (24), ஆ. அரவிந்த் (23), முனியசாமி மகன் முத்துக்குமாா் (18). இவா்கள் மூவரும், ஆடுதுறை கிராமத்திலிருந்து திருமாந்துறைக்கு மோட்டாா் சைக்கிளில் ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்தனா்.

இவா்கள் லப்பைகுடிகாடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சென்றபோது, எதிரே திருமாந்துறை நோவா நகா் பகுதியைச் சோ்ந்த ஜெ. ரஞ்சித் குமாா் (24) ஓட்டி வந்த இரு சக்கர வாகனமும் மோதிக் கொண்டன.

இதில் பலத்த காயமடைந்த 4 பேரும் பெரம்பலூா் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் ஆ. அரவிந்தும், மேல்சிகிச்சைக்காக திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னா் ரஞ்சித்குமாரும் உயிரிழந்தனா்.

இதுகுறித்து மங்கலமேடு காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.