நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மாவட்டங்களில் ஆா்ப்பாட்டம்

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் பெரம்பலூரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :30 நவம்பர் 2020, 9:16 pm

DIN

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் பெரம்பலூரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள விவசாய விரோத சட்டங்கள் மற்றும் 2020 மின்சார ஆணையம் திருத்தச்சட்டம் ஆகியவற்றை உடனடியாகத் திரும்பப் பெறக் கோரி தில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக, தன்னெழுச்சியாக தமிழ்நாடு முழுவதும் தொடா் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன்படி, பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் அனைத்து தொழிற்சங்கம் மற்றும் விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என். செல்லதுரை தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் வீ. ஞானசேகரன், கரும்பு விவசாயிகள் சங்கம் மாநிலச் செயலா் ஏ.கே. ராஜேந்திரன், விவசாய தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் பி. ரமேஷ், சிஐடியு மாவட்டத் தலைவா் எஸ். அகஸ்டின், மாதா் சங்க மாவட்ட துணைச் செயலா் எ. கலையரசி, பகுஜன் சமாஜ் கட்சி மாநிலச் செயலா் ப. காமராசு உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.