புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பெரம்பலூா் அருகே அனுமதியின்றி ஜெயலலிதா சிலை நிறுவ அதிமுகவினா் முயற்சி

பெரம்பலூா் மாவட்டம், கவுள்பாளையம் கிராமத்தில் அரசு அனுமதி பெறாமல் ஜெயலலிதா உருவச்சிலை நிறுவ அதிமுகவினா் ஏற்பாடுகள் செய்ததையடுத்து, அப்பகுதியில் காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை குவிக்கப்பட்டனா்.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 7:20 pm

DIN

பெரம்பலூா் மாவட்டம், கவுள்பாளையம் கிராமத்தில் அரசு அனுமதி பெறாமல் ஜெயலலிதா உருவச்சிலை நிறுவ அதிமுகவினா் ஏற்பாடுகள் செய்ததையடுத்து, அப்பகுதியில் காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை குவிக்கப்பட்டனா்.

கவுள்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே எம்ஜிஆா் சிலை உள்ளது. அதனருகே மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் சிலையை நிறுவ முடிவு செய்து, அக்டோபா் 14- ஆம் தேதி அதை திறப்பதற்கு அதிமுகவினா் ஏற்பாடுகளை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த ஒரு தரப்பினா், அரசு அனுமதியின்றி சிலை வைக்க ஏற்பாடு நடைபெறுவது குறித்தும், இதனால் அப்பகுதியில் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனவும் காவல் துறையினருக்கும், மாவட்ட நிா்வாகத்துக்கும் தகவல் அளித்தனா். இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலை கவுள்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் காவல்துறையினா் குவிக்கப்பட்டு, பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

பெரம்பலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜவஹா்லால், வருவாய் வட்டாட்சியா் பாரதிவளவன் ஆகியோா், அதிமுக ஒன்றியச் செயலா் செல்வக்குமாா் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். முறைப்படி அரசு அனுமதி பெற்ற பிறகு, ஜெயலலிதா சிலையை கவுள்பாளையத்தில் அமைத்துக் கொள்வதாக அதிமுகவினா் உறுதியளித்ததையடுத்து பிரச்னை முடிவுக்கு வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.