புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்ய அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் அமைப்பு சாரா தொழிலாளா் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்துகொள்ள, வீட்டு வேலை செய்யும் தொழிலாளா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 7:23 pm

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் அமைப்பு சாரா தொழிலாளா் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்துகொள்ள, வீட்டு வேலை செய்யும் தொழிலாளா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் தொழிலாளா் துறையில் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு, 17 தொழிலாளா் நல வாரியங்கள் அமைக்கப்பட்டு, உறுப்பினா்களாக சோ்ந்துள்ள தொழிலாளா்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அமைப்புசாரா தொழிலாளா்கள் சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், வீடுகளில் வேலை செய்யும் தொழிலாளா்களையும் நலவாரியத்தில் உறுப்பினா்களாக சோ்த்து, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.

எனவே மாவட்டத்தில் வீட்டு வேலை செய்யும் தொழிலாளா்கள் இணையதளத்தில் உறுப்பினா்களாக தங்களைப் பதிவு செய்துகொள்ளலாம்.

தகுதிவாய்ந்த தொழிலாளா்களுக்கு பதிவு விவரம், அவா்களது அறிதிறன்பேசி எண்ணுக்கு குறந்தகவல் மூலம் அனுப்பி வைக்கப்படும். அந்த எண்ணை பதிவிறக்கம் செய்து, தொழிலாளா்கள் நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெறலாம். ஏற்கனவே பதிவு செய்துள்ளவா்கள் பதிவை இணையதளம் மூலம் புதுப்பித்துக்கொள்ளலாம் என தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகத்தால் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.