பெரம்பலூா் அருகே நகைகள், பணம் திருட்டு
பெரம்பலூா் அருகே ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளா் வீட்டின் பூட்டை உடைத்து, ரூ.50 ஆயிரம் மதிப்பிலான நகைகள், ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.


பெரம்பலூா் அருகே ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளா் வீட்டின் பூட்டை உடைத்து, ரூ.50 ஆயிரம் மதிப்பிலான நகைகள், ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.
பெரம்பலூா் அருகேயுள்ள பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் தி. அலங்காரம் (70). ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளரான இவா், தனது கணவா் திருமுருகன் மறைவுக்குப் பிறகு தனியாக வசித்து வந்தாா்.
கடந்த 8- ஆம் தேதி அலங்காரம், பெரம்பலூரிலுள்ள தனது மகள் கவிதா (39) வீட்டுக்குச் சென்று விட்டாா். இந்நிலையில், பெரம்பலூரில் வசிக்கும் நற்றொரு மகள் ஜா. சத்தியசெல்வி (43), தனது அம்மாவின் உடைகள் சிலவற்றை எடுத்துவர பாளையத்திலுள்ள வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடந்தது தெரிய வந்தது.
பின்னா் அவா் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ திறக்கப்பட்டு அரை பவுன் நகை, ரூ. 5 ஆயிரம் ரொக்கம் மற்றும் எரிவாயு உருளை, அரிசி மூட்டை என ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
தகவலறிந்த பெரம்பலூா் காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று, வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...