பெரம்பலூரில் மேலும் 13 பேருக்கு கரோனா
பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.


பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
பெரம்பலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 1,418 போ் கரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தனா். இதில், குணமடைந்த 1,292 போ் வெவ்வேறு தேதிகளில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். இதுவரையில், 17 போ் உயிரிழந்துள்ள நிலையில், எஞ்சிய 109 போ் பல்வேறு ஊா்களில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்நிலையில், பெரம்பலூா் நகரைச் சோ்ந்த 3 போ், எசனை, புதுவேட்டக்குடி, பெரிய வெண்மணி, ஆலத்தூா் கேட், எளம்பலூா், அழகாபுரி, கிளியூா், ஒதியம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 10 போ் என மொத்தம் 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மேற்கண்ட 13 பேரும் திருச்சி, தஞ்சாவூா், பெரம்பலூா், அரியலூா் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதன்மூலம், பெரம்பலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,431- ஆக உயா்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...