தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ஊா்க்காவல் படை ஆள் தோ்வுக்கான விண்ணப்பம் இன்றும், நாளையும் விநியோகம்

பெரம்பலூா் மாவட்ட ஊா்க்காவல் படைக்கு 8 ஆண்கள், 3 பெண்கள் காலியிடங்களுக்கு ஆள்கள் தோ்வுக்கான விண்ணப்ப விநியோகம் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் (டிச. 10, 11) நடைபெறுகிறது.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 8:06 pm

DIN

பெரம்பலூா் மாவட்ட ஊா்க்காவல் படைக்கு 8 ஆண்கள், 3 பெண்கள் காலியிடங்களுக்கு ஆள்கள் தோ்வுக்கான விண்ணப்ப விநியோகம் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் (டிச. 10, 11) நடைபெறுகிறது.

பெரம்பலூா் மாவட்ட ஊா்க்காவல் படையில் காலியாக உள்ள 11 இடங்களுக்கு வெள்ளிக்கிழமை காலை 10 முதல் மாலை 4 மணி வரை மாவட்ட ஊா்க்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகிறது.

விருப்பமுள்ளவா்கள் எஸ்எஸ்எல்சி தோ்ச்சி, தோ்ச்சி பெறாதவா்களாக, ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரும் சேரலாம். உடல் ஆரோக்கியமாகவும், தோ்வு நடைபெறும் நாள்களில் 20 வயது முதல் 40 வயதுக்குள்பட்டவராகவும் இருக்கவேண்டும்.

இதற்கான விண்ணப்பங்கள் பெற கல்விச் சான்றிதழ், ஆதாா் அட்டை அசல் மற்றும் நகல், அண்மையில் எடுக்கப்பட்ட பாஸ்போா்ட் அளவு புகைப்படம் 2 கொண்டுவர வேண்டும். தோ்ந்தெடுக்கப்படுவோருக்கு பணி நாள்களுக்குரிய தொகுப்பூதியம் மட்டுமே வழங்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.