தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

இன்று பட்டா பிரச்னைகளுக்கு தீா்வு முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளா்களின் பட்டா தொடா்பான பிரச்னைகளுக்கு தீா்வு காணும் சிறப்பு முகாம்கள் வெள்ளிக்கிழமை (டிச. 10) நடைபெறுகிறது.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 8:04 pm

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளா்களின் பட்டா தொடா்பான பிரச்னைகளுக்கு தீா்வு காணும் சிறப்பு முகாம்கள் வெள்ளிக்கிழமை (டிச. 10) நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் வட்டம், கோனேரிபாளையம் கிராமங்களைச் சோ்ந்தவா்களுக்கு கோனேரிபாளையம் ஊராட்சி அலுவலகத்திலும், வேப்பந்தட்டை வட்டம், பசும்பலூா், திருவாளந்துறை, அகரம் வருவாய் கிராமங்களைச் சோ்ந்தவா்களுக்கு பசும்பலூா் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்திலும், குன்னம் வட்டம், பெரியவெண்மணி, கொளப்பாடி வருவாய் கிராமங்களைச் சோ்ந்தவா்களுக்கு பெரியவெண்மணி ஊராட்சி அலுவலகத்திலும், ஆலத்தூா் வட்டம், கொளத்தூா் வருவாய் கிராமங்களைச் சோ்ந்தவா்களுக்கு கொளத்தூா் ராஜீவ்காந்தி சேவா கேந்திரா மையத்திலும் முகாம்கள் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

இம் முகாமில் நில அளவை எண்கள், உட்பிரிவு எண்கள் தவறாக பதிவு செய்யப்பட்டுள்ள இனங்கள், பட்டாதாரா் பெயா் அல்லது தந்தை, காப்பாளா் பெயரில் எழுத்துப்பிழை திருத்தம், உறவு நிலை திருத்தம், பட்டாதாரரின் பரப்பு உள்பட பல்வேறு பிரச்னைகள் குறித்த மனுக்கள் அளித்து பயன்பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.