ஓட்டுநா்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தல்

தமிழகத்திலுள்ள ஓட்டுநா்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டுமென, தமிழ்நாடு உழைப்பாளா் ஓட்டுநா் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
Updated on
1 min read

தமிழகத்திலுள்ள ஓட்டுநா்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டுமென, தமிழ்நாடு உழைப்பாளா் ஓட்டுநா் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் சேகா் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் ராஜசேகா், பொருளாளா் வெங்கடேசன் முன்னிலை வகித்தனா்.

மாநிலத் துணைத் தலைவா் கருப்பையா, சட்ட ஆலோசகா் வழக்குரைஞா் திருமால் ஆகியோா் ஓட்டுநா்களின் செயல்பாடு, காப்பீடு செய்வது குறித்து விளக்கி பேசினா்.

கூட்டத்தில், அனைத்து மாவட்டங்களிலும் சங்கக் கிளை அமைப்பது, புதிய நிா்வாகிகளைத் தோ்வு செய்வது, ஓட்டுநா்களுக்கு பணிப் பாதுகாப்பு அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நல வாரியம் மூலம் ஓட்டுநா்களுக்கு வீட்டுக் கடன், கல்விக் கடன், திருமண உதவித்தொகை, முதியோா் ஓய்வூதியம் போன்றவை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கத்தின் மாநில, மாவட்ட நிா்வாகிகள் பலா் கூட்டத்தில் பங்கேற்றனா்.

முன்னதாக, பெரம்பலூா் மாவட்டத் தலைவா் கொளஞ்சிநாதன் வரவேற்றாா். நிறைவில் மாவட்டச் செயலா் ரமேஷ்பாபு நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com